சந்தம் சிந்தும் கவிதை

ஜெப ஶ்ரீ தெய்வீகன்

மலைப்பு

ஆலமரமாய் பாமுகமும்
அதன் விழுதுகளாய் பல்ஆசானும்
நாளும் வளரும் மாணாக்கரும்
நல் உறவாய் நீளும் பொழுதுகளும்.

பலம் தந்து களம் தந்த அதிபர்
இணையவராய் மனைவியரும்
இடைவேளையற்றும் வீற்றிருப்பர்
உணவாய்த் தமிழை ஊட்டிடுவர்!

மலைத்து நானும் நிற்கின்றேன்
நிலைத்து மேலும் நீளவென
குலத்து சாமி வரம் வேண்டி
கரங்கள் குவித்து துதிக்குன்றேன். கவிதை ஒன்று வடிக்கின்றேன்!

மலைபோல் இடர்கள் தொடர்ந்தாலும்
குலைத்து சிதைக்க முயன்றாலும்
நிலை பாமுகம் ஒளிவீச நெஞ்சில் ஆர்வம் அலையாக விலையாய் எதையும் தந்தேனும் விடாது இயங்க
ஒன்றிணைவோம்.