🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-35
07-05-2024
விழிப்பு
பூமித் தாயின் அழகைக் காண
பூகோளத்தின் மலர்ச்சி பொங்க
மண்ணில் பிறந்த நன்றிக்காய்
மரணிக்கமுன் அழிப்போம் விழிதானம்!
கழைத்து உழைத்து உடல் வலுவற்றாலும்
கனக்க உறுப்பு தானம் நிழ்த்தாவிடிலும்
ஹீமோகுளோபின் கட்டுப்பட, மாரடைப்பு மறைய அளித்திடு இரத்த தானம்!
வினாடியொன்றுக்கு வீணாக்கும் நீரை
பல அடி ஆழத்தில் பெற்றெடுத்தாரே
பகுத்தறிவு கொண்டிங்கே சேமித்து நீரை
பல சந்ததியைக் காப்போம் நாமே!
எழுதுகோலை விட ஏவுகணை சக்தியல்ல
எழுதியிதை எய்திடுவோம் ஈட்டியாய்
விழிப்போரெல்லாம் விழிக்கட்டும்
விழிப்புணர்வு பிறக்கட்டும்.
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்லீகன்.