வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-19

11-01-2024

உலகின் நிலை மாற என்னென்ன கொண்டு வருகிறாய்…

புதிதாய்ப் பிறந்தவளே புத்தாண்டே
புலம்பி நானும் தள்ளுகின்றேன்
நினைவினில் போட்டு விடு -நீ
நிம்மதியைக் கொடுத்து விடு!

விலைவாசியைக் குறைத்து நீ தொலைபேசியை கொஞ்சம் முடக்கி
நிலையான தொழிலைக் கொடுத்து
உலை வைக்க அருள் புரிவாய்!

இயற்கை அழிவை அகற்றி
செயற்கை ஒக்சிஜனை சுவாசித்து
தற்கொலை தகர்த்து, தன்மானம் காத்து
மனிதாபிமானம் கொண்டு

நோயற்ற வாழ்வு பெற்று
பல்லாண்டு, பல்லாண்டு என்று
உறவுகள், குடும்பமென குதுகலமாக வர
உன்வரவும் உத்தரவும் தருவாய்!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.