சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-21

14-11-2023

நீரழிவு

தொப்பை பெருக
கரும் புள்ளி வளர
முகச் சுருக்கம் குறைய
திடீர் பளபளப்பு காண

கொழுப்புத் தாடையில தங்க
பணக்காரப் பயலா? நினைக்க!
சிறு நடுக்கமும் மந்தமுமாய்
வந்து தங்குது நீரழிவு!

நீரழிவு வந்தாலே பேரழிவு
நிரந்தரமாய் நாற்காலி போடுது
பல நோய்க்கு வித்தாக மாறுது
அறு சுவையை அகற்ற வேண்டுது!

காடுகளை அழித்து
கைத்தொலைபேசியே
கதியான சமுதாயமே
பட படத்த உணவை உண்டு
பரம்பரை நோய் எண்ணாமல்

இச்சையோடு பச்சைக்
காய்கறி, பழம் உண்டு
மிச்சத்திற்கு சிறுதானியம்
நார்ச்சத்தும் கொண்டு
நடை பயிற்சியும் கண்டு வர

பணக்காரப் பரம்பரை
நீரழிவு பாதி வழியில்
பறந்து போக நம்
ஆயுளும் அதிகரிக்கும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.