வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-16

21-09-2023

தியாகமே தீர்ப்பானது

துள்ளித் திரிந்து தூங்கி
எழும் வயதினிலே
பள்ளிப் படிப்பிளந்து
தாய் மண்ணைத்
தான் காக்கவென

எல்லையை மறித்து
உயிர்நீத்த மாவிரரின்
தியாகமே தீர்ப்பானது
நியாயமற்றவரிடம்!

உண்ணா நோன்போடு
உயிர்நீத்த தியாகியும்
காற்றுப்புகா இடத்துல
கணையாய்ப் புகுந்த காவலரும்
தியாகமே தீர்ப்பானாலும்…

இனத்திற்காய் வாழ்ந்தோர்கள் இதயத்தால் வணங்கிடுவோம்
இவர்கள் தியாகத்திற்காய்
யாம் செய்வோம் யாகம்!

தியாகங்கள் தீர்ப்பாகலாம்
உலகில்
நியாயங்கள் திரும்பலாம்
விரைவில்
நாங்களும் பார்க்கலாம்
நிஜத்தில்
எதுவும் நடக்கலாம்
புலத்தில்!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.