🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-16
29-08-2023
வாக்கு
போட்ட வாக்கு போட்ட இடத்தில்
நின்று போச்சு உந்தன் பேச்சு
நேற்று சொன்ன வார்த்தையெல்லாம்
இன்று காற்றோடு போயாச்சு!
வாக்கு கொடுத்தால் நோக்கு
போக்கை கொஞ்சம் மாற்று
தலைவனைத் தேர்ந்தெடு
தவறிளைத்தால் தட்டிக் கேள்
எமது நாடு எமது உரிமை
சிந்தித்து வாக்களிப்போம்
சிந்தாமல் சிறகடிப்போம்
சீரழிவை நாம் தடுப்போம்
வாக்களிக்கத் தவறி விட்டால்
துரோகி யாருமில்லை
வாக்களிப்பை நெறிப்படுத்தி விட்டால்
தலைவன் உன்போல் வேறு இல்லை!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்