🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-14
24-08-2023
என்று தீரும்…
ஆண்டுகள் பலவாகி
ஆறாத வலியாகி
வேண்டிய தீர்வைத்
தருவார் யார் எமக்கு?
வீட்டிற்குள்ளே புதைந்து
போன குடும்பங்களும்
ஆற்றுக்குள்ளே அடங்கிப்
போன உறவுகளும்
மண்ணுக்குள் விதைக்கப்பட்ட
மாவீரச் செல்வத்தின்,
தமிழீழத் தாகத்தின்
நீங்காத மூச்சுக்களும்
மறைக்கப்பட்ட பல உறவு
இறைக்கப்பட்ட நீராச்சு
சொல்லவொணா சோகங்கள்
சொல்லிக் கொண்டு போகலாம்.
பஞ்சுமெத்தை கட்டிலிலே படுத்துறங்கினாலும்
நெஞ்சுக்குள்ளே நெருடுதிங்கே
அங்காங்கே வலிகள்!
என்று தீரும் இன்று தீரும்
வெம்பி நின்றிராமல்
விட்ட காலம் இனியும் நீண்டுடாமல்
நின்று திரும்பிப் பார்ப்போமே!
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.