🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-20
24-10-2023
ஆறு மனமே ஆறு
நிலையென நினைத்த சந்தோஷம் நிர்கதியாகி நிமிடத்தில் தொலைந்ததும்
நித்தமும் தேடும் எவையும் உலையில்ப் போடமுன் விலையைக் கண்டு துடிப்பதும்
மலை போல சில அழுத்தம் மனதை நெருடுவதும்,
உருளும் வண்டியின் சக்கரம் போல் ஒரு நாள் உருண்டோடி விடும்.
விஞ்ஞானம் படித்து மகன் விஞ்ஞானி ஆவான் என்றும்
தமிழைப் படித்து இவன் தாய் மண்ணை காப்பான் என்றும் கனவு கண்டால்..
தஸ் புஸ் எனப் பிறமொழியைப் படித்ததும் இன்றி, இவன் கணனியில காலத்தை வீணாகக் கழிக்கிறானே!
கண்ட மனமே கலங்காம ஆறு நீ,
வெட்டாட்டத்தில் தாயம் போட்டு வெண்டவனும் உண்டு தானே!
இன்றைய வலிகளெல்லாம் நாளைய பலமேயாம்!
தோல்வி கண்டு துவண்டிடாமல், கடும் உழைப்போடு ஊதியமாக்கி
வீழ்ந்து எழும் நேரமெல்லாம் மனதில், வீரன் ஒருவன் அனலாய் பொறிந்து
எல்லா வெற்றியும் எம் கையில் ….
என்றெண்ணி ஆறு மனமே ஆறு!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.