சந்தம் சிந்தும் கவிதை

ஜமுனமலர் இந்திரகுமார்

போச்சு
பாக்கிடிச்ச உரலும் போச்சு
பாட்டி சொன்ன கதையும் போச்சு

கதையளந்த கள்ளும் போச்சு
ஆணைக்கோட்டை எள்ளும்
போச்சு

அம்மியிலே அரைச்ச கறி
மிக்க்ஷியிலே பறந்தடிக்கும்

கள் கலந்து நோதிக்க வைச்சு சுட்டிட்ட அப்பமெல்லாம்_இப்போ
யூரியூப்பில் களமேறும்

ஈசியாக காலனிடம்
வீசா வாங்க
ஈஸ்ட் கலந்த பீட்ஷா இப்போ
ஈசியாகக் கிடைக்குதிங்கே

ஈசியாக எடை எடுக்கும்

ஓடர் ஒன்று போட்டுவிட்டால்
றெடிமேட்டுச் சாப்பாடு
பாஸ்ராவே வந்துவிடும்.

ஜமுனாமலர் இந்திரகுமார்