குழலோசை
துளைகள் ஒன்பது
தாங்கிய குழலாகும்
துல்லிய கானமாய்
செவிக்கு விருந்தாகும்
பலரது நோய்க்கும்
பக்குவ மருந்தாகும்
பாவையர் இணவும்
தரணிக்கு புகழாகும்
கானமும் நாதமும்
காற்றில் கலந்தாடும்
வானமும் ஈற்றில்
ஓசையாய் ஒலித்திடுமே
செல்வி நித்தியானந்தன்
பாமுகத்தில் பதியப்படவில்லை