சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன்

கலைவாணி
நவம் என்றால் ஒன்பதாய்
நவராத்திரி ஒன்பது
இரவாய்
வீரம் .செல்வம்.கல்வியாய்
வீட்டிலும்,பாடசாலை அலுவலகம் எங்கும்
நிறைபவளாய் இருப்பாரே

ஆய கலைகளில் சேர்ந்து வருவாய்
தூய உள்ளமதாய்
நிறைவாய் இருப்பாய்
தாமரைப் பூவில்
அமர்ந்தே இருப்பாய்
தரணி சிறக்கவும்
மகிழ்ந்து இருப்பாய்

நதியாய் நாமமாய்
நல் பெயரானாய்
நன்றியாய் படையல்
படைத்து நானிலத்தில்
வணங்கிடுவோமே

செல்வி நித்தியானந்தன்