சந்தம் சிந்தும் கவிதை

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

துரோகம்
**********
துணையென மகிழ்ந்திடத் துலங்குவர் நடிப்பினால்
இணைந்திடல் நலமென இயம்பிடும் மனத்தினுள்
அடக்கிடும் வலிமையை அறிவொளி தருமெனின்
முடக்கிடும் வலிமையின் முனைப்பினை அறியலாம்
நம்பிடும் கணமெலாம் நரிகளின் வருகையால்
எம்பிடத் தடுப்பதும் ஏற்றதாய் உரைப்பதும்
நினைவுகள் பெருகியே நிலைகளை உணர்த்திட
வினைகளின் பிடிதனில் விழுவதும் துரோகமே!