வியாழன் கவிதை 06-10-2022
ஆக்கம் – 42
என் வகுப்பறை ஆளுமைகள்
தலைவிதியென அமைந்திட்ட குருவை
தலை வணங்குவோம்
மணல் பரப்பி ஓர் விரல் பிடித்து
ஆலமரத்தின் கீழ் அமர்ந்து
அன்னைத் தமிழை அழகாக எழுதவைத்து
நன்நெறிப் பாடத்தை உள்ளத்தில் விதைத்து
உண்மையும் நேர்மையும் உயர்விற்கு வழியென
நல்வழி காட்டிய நல் ஆசிரியர்கள்
ஆரம்பப் பள்ளி அனைவருக்கும் தாய்மடி
முத்தான மூன்று ஆசியர்கள் என்றும்
என் நினைவுகளில்
பொன்னான பொன்னயா வாத்தியார்
என்னுள் தமிழை வளர்திட்ட நல்ஆசான்
புத்தக சுமைகளை இறக்கி வைக்கும் வகுப்பறைகள்
ஆளுமைமிக்க ஓருசில ஆசிரியர்களால்
புத்தகப் பக்கங்கள் புரட்டப்படும்
புலமையும் அங்கே புலப்படும்
புரியாத விடைகளும் அதற்குளுண்டு
மறைக்கப்பட்ட பக்கங்கள் மனதை நெருடும்
முதல்தர மாணவர்கள் முன் வரிசையில்
கெட்டிக்கார மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தந்து
பெயர் பெற்ற ஆசிரியர்கள் நிறைய உண்டு
வானத்தைப் போல் ஆசிரியப் பெருந்தகைகள்-ஆனாலும்
ஓசோனில் விழுந்த ஓட்டையாக சில ஆசான்கள்
பிரம்பால் அடித்தால் படிப்பில்
பிடிப்பு வருமென்ற பிரமாக்கள்
குட்டிக் குட்டியே மாணவர்களை
குட்சிச் சுவராக்கிய சில ஆசிரியப் பெருமக்கள்
ஏற்றிவிட்ட ஏணிகளும் உண்டு
இறக்கி விட்ட பாவிகளும் உண்டு
பதர்களை நீக்கிய நெல்மணி போல்
நல்வழி காட்டி நற்பணியாற்றிய
நல் ஆசிரியர்களை என்றும் போற்றுவோம்
ஆசிரியர் தினத்தை கொண்டாடுவோம்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
04-10-2022