சந்தம் சிந்தும் கவிதை- 178
பாமுகம்
வானொலியாய் வான்பரப்பில் வலம் வந்து
பாமுகமாய் மலர்ந்து ஓளி வீசுகின்றது
பலமுகங்கள் அறிமுகத்தால் ஆற்றல் பெறுகின்றது
பன்முகத் திறமைகள் வெளிவருகின்றது
கடந்து வந்த பாதையோ மிகக் கடினமானது
வார்த்தைக்குள் அடங்காத வலிகள் நிறைந்தது
வைராக்கியமே இன்று வரை வழிநடத்துகின்றது
உற்ற துணையும் உறுதுணையாக நிற்கின்றது
ஆண்டுகள் இருபத்தைந்து நிறைவானது
தனித்துவத்தால் தலைநிமிர்ந்து நிற்கின்றது
எதிர்காலச் சந்ததிக்கு நல்வழி காட்டுகின்றது
இலட்சியப் பயணம் நன்றே தொடர்கின்றது
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
12-06-2022