சந்தம் சிந்தும் கவிதை
வாரம்:221
09/05/202
காணி
சொத்தாக ஓருதுண்டக் காணியும்
குடி இருப்தற்கு ஓர் குடிசையும்
வாழ்வில் கிடைப்பது வரமாகும்
நடுவினிலே வீடிருக்கும்
நாற்புறமும் வேலியிலே
பூவரசம் பூ பூத்திருக்கும்
முப்புறமும் முக்கனி மரங்களும் நிறைந்திருக்கும்
முற்றத்து மல்லிகையும் மணம் பரப்பும்
முன்காணிப் பனைமரமும் நினைவில் வரும்
நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பொற்காலம்
தலைகீழ் மாற்றத்தில் யாழ்ப்பாணம்
சந்தனம் தடவிய வெளிநாட்டுக்காசு கொட்டுவதால்
கட்டுகின்றார்கள் வெளவால்கள் வாழ்வதற்க்கு
மாட மாளிகைகள்
முற்றத்து நிலம்முழுவதும் வண்ணக்
கற்கள் பதிப்பதால்
நிலத்தடி நீருக்கு வரப்போகும் பெரும்கேடு
குடிப்பதற்க்கு குடிநீரின்றி குடாநாடு
தவிக்கும் காலம் வரும்
விடுவிக்கபடாத காணிக்கு
வீதியில் மக்கள் போராட்டம்
புலம்பெயர் உறவுகளின் காணிகளை
காணிக்கை கேட்போர் ஓருபுறம்
ஓரு பரப்புக் காணிவாங்க மக்கள் திண்டாட்டம்
கோடிகளில் விலையை உயர்த்தும் புலம்பெயர் தேசத்து
புண்ணியவான்கள் மறுபுறம்
பாவத்தை சொத்தாக சேர்காதீர் பிள்ளைகளுக்கு
ஏழு தலைமுறைக்கும் தீராது பாவம்
ஓருகுழி நிலமின்றி வாழும் நிலையில் மக்கள்
ஊர்கள் தோறும் வான்உயர்ந்த கோபுரங்கள்
கோவில் எங்கும் திருவிழாக் கொண்டாட்டங்கள்
பத்துக் குட்டு மேளச்சத்தம் விண்ணைப்பிளக்கும்
பசித்த வாய்க்கு பாலின்றி குழந்தை தவிக்கும்
ஆண்டவன் காதிற்கும் அழுகுரல் கேட்காது
ஆர்பரிக்கும் அரோகரா கோசத்தில்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
05-05-2022