வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 24-03-2022
ஆக்கம் – 36
துளி நீர்

ஓரு துளி நீருக்கும் உயிருண்டு
பல்லுயிர்களின் உயிர்காக்கும் ஆகாரம்
உலகமே தண்ணீருக்கு தவிக்கும் காலம் வரும்
பொன் கிடைக்கும் ஓருவாய் தண்ணீர் கிடைக்காது

காடுகள் அழிந்து கானகமானது
கனமழைப் பொழிவும் கானல் நீரானது
பொழியும் மழையும் வீணாய் கடலில் கலக்கின்றது
பொறுப்பற்ற செயல்கள் வேதனை அழிக்கின்றது

வெற்றுக்குடங்கள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றது
தவித்த வாய்க்கு தண்ணீர் தரமுடியாமல் போனதால்
நீச்சல் குளத்திற்க்கு நீரை நிரப்பும் கூட்டம் ஓருபுறம்
ஓருதுளி நீருக்கு தவிக்கும் உயிரினங்கள் மறுபுறம்

நீரின்றி அமையாது உலகு வள்ளுவன் வாக்கு
நீர்வளப் பெருக்கமும் நீர்மேலாண்மையும்
நிரந்தர தீர்வாய் அமைந்திடல் வேண்டும்
வான்மழை பெய்யட்டும் வையகம் சிறக்கட்டும்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
24-03-2022