சந்தம் சிந்தும் கவிதை

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 167
பணி

நற்பண்புகள் ஊட்டி நல்வழி காட்டி
பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்கள் பணி
நன்நெறிப் பாடமும் மெய்நெறி வழியும்
மாணவனிற்கு எடுத்துரைப்பது ஆசிரியர் பணி
கூடி மகிழ்ந்து ஓன்றாய் வாழ்வதும்
அன்பு கொண்டு அரவணைப்பதும் உறவுகள் பணி

உலகம் முழுவதும் உண்மைச் செய்தியை
உரக்கச் சொல்வது பத்திரிகைப் பணி
இயற்கையை அழிவிலிருந்து பாதுகாத்து
சுயநலமின்றி வாழ்வது மக்கள் பணி
மக்கள் சேவையே மகேசன் சேவையென
நீதி தவறாது நல்லாட்சி செய்வது அரசின் பணி

இடர் பிணி வரம்போது உதவிகள் செய்வது நற்பணி
வாழும் காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்
இதய சுத்தியுடன் இறைவனுக்கு செய்வது இறைபணி

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
18-03-2022