வியாழன் கவிதை

சிவா மோகன்

வணக்கம். “வரப்புயர. ”
உலகம்இசைந்திட உணவு தேவை, அதனை உவந்து தருவோர் காராளர்” புதிதாய் அரும்பி பசிப்போர் புசிக்க பாங்குடன் அசையும் அழகு நெற்கதிர். ஔவை கூறினாள் அன்று “வரப்புயர”ஆமாம் இன்று அதுவும் ஓர் சிறப்பிலும் சிறப்பு மன்னனை வாழ்த்திட அம்மை பாடியது இன்று மக்களின் பட்டினி தீர்க்கும் “மா ” மந்திரம். நீண்ட வரம்புடன் நெல் உற்பத்தி ,அதிலே நீர் உயர்ந்து ,அதனூடே குடி சிறந்து, அவ்வழியே கோல் நிலைத்து,அரசன் பெருமையும் அகிலத்தில் சிறக்குமாம். பஞ்சம் பசி போக்கும் பழைய வரப்பு,பாரினில் என்றும் விரிந்து பரந்து, பாசம் கண்டு நேசம் கொள்வது, பண்பினில் சிறந்து நிலைப்பது “வரப்புயர”.நன்றி.