சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 231 ]
“வாக்கு”
வாக்குரிமை ஆணிவேராய் கொண்ட ஜனநாயகம்
வாக்குச்சீட்டிலும் ஊழல்புரியும் பணநாயகம்
படித்த மக்கள் அதிகம் வாழும் எங்கள் தாயகம்
வாக்குரிமையின் அர்த்தம் புரியாத பரிதாபம்

மக்கள் வாக்கே நிர்ணயிக்கும் அரசியல் அதிகாரம்
மங்காத அதிகாரம் இன்று சந்தையில் விலையாகும் அநியாயம்
வாக்கின் செல்வாக்கு இன்று செல்லாக்காசாய் போன அதிசயம்
வாக்கை மறவாதே! அதுவே உனது உரிமைகாக்கும் ஆயுதம்

தேர்தல் நெருங்கிவரும் நேரம் களத்தில் கட்சிகள் மும்மூரம்
தாமே ஆட்சிக்கு வருவோம் எனக்கண்மூடி ஆரூடம்
திட்டங்கள் எதுவுமின்றி மட்டம் தட்டுவதே அவர்கள் நோக்கம்
தேசத்தின் வாக்காளர்களே! எதிர்காலத்தின் அதிகாரம் உங்கள் கையில்!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.