சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 216 ]
“நீர்க்குமிழி”

நீர்க்குமிழி ஒக்கும் மானிடர் வாழ்வு
நிலையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
நினைத்து நினைத்து மாய்வதனால் வளம் பெறுமா?
நிலையான விடிவொன்று உண்டு எனில் அது மரணம் தானா?

நீர்க்குமிழி போலும் வாழ்வும் தோன்றி மறையுமல்லவா?
நிரந்தரமாய் மனிதர் வாழ்வில் எஞ்சுவது எதுவுமில்லையா?
வானிருந்து வையகத்து வாழ வந்த உயிர்துளிகள்
வாழ்ந்து காட்ட தேடவேண்டும் நேர்வழிகள்

இடையிடையே வந்துறுத்தும் இயற்கை தரும் கடுமிடர்கள்
இணையாக வாழ்வுதனைக்காவு கொள்ளும் விதிபின்னும் சதிவலைகள்
வாழ்க்கையில் என்றும் மாற்றமிலா நிகழ்வாம் இறப்பெனும் இறுதி
வாழுகின்ற மனிதர்க்கெல்லாம் நீர்க்குமிழி காட்டும் பாடம் உறுதி.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.