வாரம் 211
“சாதனை”
சாதனைகள் பலபுரிந்த மனிதன் உலகைt ஆழ்கின்றான்.
சாதனைகள் இன்றேல் உலகில் வளர்ச்சி ஏது? நாகரீகம் ஏது?
சாதனைகள் புரிந்தோர் புகழ் சரித்திரத்தில் நிலைக்கின்றது
சாதனைகளின் அடிப்படை நன்னோக்கம்,ஊக்கம், விடாமுயற்சி.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையல்ல.
சாதனையென்பது தற்செயல் நிகழ்ச்சியுமல்ல
சாதனை புரிய நினைத்தவரின் தோல்வி அவமானத்திலும் முடியலாம்.
கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் கொண்டோர் மீண்டும் முயலலாம்
தோல்விகளின்பின் ஈட்டும் வெற்றிகள் சாதனைகள் ஆகலாம்.
ஒரு சக்கரத்தைச்சுற்றி குயவன் நேர்த்தியான பல பானைகள் சமைக்கலாம்
ஒரே அச்சில் யுகம்யுகமாய் சுழலும் பூமி நல்ல மனிதரை மட்டும் ஒழுங்காய் படைப்பதில் தவறுவது ஏன்?
சோதனையின்றி சாதனையில்லை சோதனையும்
வேதனையும் சாதனையின் ஆரம்பம்
சாதனையே மனித வாழ்வின் எல்லை,முயன்றல் முடியாதது இல்லை
சாதனை புரிய விரும்புபவன் புத்தகங்களில் தேடுகின்றான்
சாதனை புரிந்தவனோ புத்தகத்துள் இருக்கின்றான்
வலிகள் நிறைந்த வாழ்க்கையில் சோதனைகள் பல கலந்த சாதனைகள் ஒழிந்திருக்கும்
மனஉறுதியுடன் தாங்கிக்கொண்டு சாதனை படையுங்கள்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.