[ வாரம் 264 ]
“விழிப்பு”
சுயமாய் சிந்திக்காதுஅவமாய் காலங்கழிக்கும் மானிடனே!
துணிவுடன் விழித்தெழுந்தால் துன்பங்கள் தொலையும்
விழிப்புடன் நீயிருந்தால் என்றும் வெற்றி உனக்கே
சோம்பலுடன் தூங்கிப்பார்,நாடிவரும் தோல்வி
விழிப்புடன் முயற்சியும் துணிந்து காண்பாய் உயற்சி
விழிப்புடன் இல்லத்தைக் காவல்செய்யும் அன்னை
மக்களுக்கு அரணாய்நின்று அவையிருந்தும் அறிவுடை தந்தை
கொடுந்தொற்று நோயால் ஊரில் உயிர்க்கொள்ளை?
விழிப்புடன்தடைமருந்தேற்றி காத்திடலாம் உயிரை
தடைமருந்தால்கிருமிகளனைத்தும் நிர்மூலம்
கல்வியில் விழிப்போடிருப்பாய்,முதன்மை பெறுவாய்,
கடமையில் கண்ணாயிருப்பாய்,பதவிகள் உயர்வாய்,
வாய்மைக்கடைப்பிடிப்பாய், பிறர்நம்பிக்கைபெறுவாய்
சோரம் போகா நடுநிலை சமூக அரசியல் செய்வாய்
நாடுபோற்றும் நல்ல தலைவனாய் என்றும் விழித்திருப்பாய்.
வீதிக்கு வீதி விழிப்புக்குழவுமுண்டு விழிப்பாயிருமானிடனே!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.