[ வாரம் 208 ]
“விருப்பு”
எண்ணிலடங்கா விருப்புகள் நிறைந்ததே மனமெனுங் களஞ்சியம்
நல்லவை தீயவை எவையெனக்காட்டுமே விளைவுகள் அனுபவம்
விருப்புகள் தோற்றால் நெஞ்சில் உருவாகுமே பெருஞ்சினம்
வென்று விட்டாலும் திருப்தியடையாத பேராசைகொண்ட அடிமனம்
வெறுப்புக்கும் பேராசைக்கும் இடையில்தவிப்பதே மனித வாழ்க்கை
விதை சீராயின் விளைச்சலும் மேலாகும்,விருப்பு நன்றாயின் விளைவும் மேன்மைபெறும்
பெறமுடிந்ததை விருப்பில் கொள்ளல் விவேகம் சாதிக்கும் விருப்பானால் மனதில் உறுதி கொள்.
நன்மை பயக்கும் நல்விருப்புக்கள் கனவிலும் நனவினும் சுமந்து செல்.
தீயவை என்றுமே தீமைபயப்பவை நல்லவை நன்மையே விளைவிப்பவை
ஆன்றோர் அறிவுரையும் எம்மதக்கோட்பாடும் என்றும் புகட்டும் நல்விருப்பை
எண்ணம் போலவே எல்லாம் நடந்தால் இறைவன் இல்லையடா!
தீய வழியில் திரவியம் கிடைத்தாலும் மனம் திருப்தி அடையாதடா!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.