சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 207

“யோசி”

சிந்திக்கும் திறன் பெற்றாய் அதனால் சிகரம் தொட்டாய் மனிதா!
சிந்திக்காமலே செயலாற்றி சிறுமை அடைதல் தகுமா?
ஆறறிவு படைத்திருந்தும் விலங்கு நிலை அடைகின்றாய்
ஆசையின் வசமாகி அறிவை இழப்பது சரியா?
இதை நன்றாய் நீ யோசி!

ஆற்றும் கருமம் யாவும் ஆராய்ந்து செய்தலே அறிவுடமை
மாறாய் இறங்கிய பின் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணுவது மடமை
கருமங்கள் ஆயிரம் வரிசையில் காத்திருக்கு முன் கவனத்துக்காய்
ஆழமறியாது காலைவிடுதல் நன்றாகுமா?
இதை நீ யோசி!

பணம் தேடல் வாழ்க்கையில் மிகவும் பிரதானம்
அதை நல்வழியில் தேடிடுவாய் “அவதானம்”
சோம்பல் தவிர்த்திடுவாய் முயற்சி கைவிடாது
திருவினையாக்கிடுவாய்.

உலகம் பழிக்கும் செயல்யாவும் மறந்திடுவாய்
நல்லதையே நாடு,நாடே உன்னை வரவேற்கும்
அடுத்தவர்க்கு உதவிடுவாய் இறையருளும் தேடிவரும்
நன்றே செய்ய, என்றும் நீ யோசி!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.