சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 193

“ஒன்று பட்டு”

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு
சிறு அலகு குடும்பம் தன்னில் ஒற்றுமை குலைந்தால்
அவனியில் எங்கனம் ஆகும் உயர்வு?
இனமத மொழியால் வேறுபட்டோம் நாம் அனைவரும் ஒருதாயின் மக்களன்றோ?

மனிதன் என்பவன் ஒரு சமூகப்பிராணி! அவன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
ஐந்தறிவேயுள்ள பிராணியைப்பார்,
ஒழுங்கு கட்டுப்பாடு ஒற்றுமை பேணி உயர்வாய் வாழ்வது அதிசயமன்றோ?

ஆறறிவு படைத்தும் உன் ஆணவம் சுயநலம் உன்கடமை உணர்வை மழுங்கடிக்குதோ?
தனியொருவன் முன்னேற்றம் குடும்ப சமூக தேசியத்தின் உயர்வன்றோ?
நீ திருந்தி உலகம் உய்வது என்று உண்மையாகுமோ?
உள்ளத்தால் பொய்யாது ஒழுகக் கற்றுக்கொள்.
உலகம் உன்னை மதிக்கும் ஒன்றுபட்டு உயரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்