சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 192
“கலைவாணி”

கலைவாணித்தாயே! அறிவெனும் கல்விக்கு அன்னையவள் நீயே!
ஊளமார உனைத் தொழுவோரைக் காப்பவள் நீயே!
வளந்தரும் செல்வம்,அஞ்சாத வீரம் இருந்தும் பயனுண்டோதாயே?
நிறைமதி கல்வியூட்டி அனைத்தையும் அழியாது காப்பவள் நீயே!

ஆய கலைகள் அனைத்தையும் உனை உறுதியாய் நம்பினோர்க்கு எளிதாக உணர்விக்கும் தாயே!
பளிங்குருவாய் உள்ளத்தில் நீயமர்ந்தால் இடர் எதுவும் அண்டாது அன்னையே!
நவராத்திரி ஒன்பதுநாள் இறுதியிலே உனைப்போற்றி விரதமதை முடிப்பார்கள் தாயே!
கல்வியா,செல்வமா,விரமா உயர்ந்தது எனும் அறியாமை
போக்கி உண்மையை உணர்துபவள் நீயே தாயே!
காத்தல் தொழிலைக் கச்சிதமாய் முடிக்கும் திருமால் ஆங்கே
உலகில் காத்திடும் பெண் தெய்வம் என உயர்ந்தவள் நீயன்றோ ?
வெள்ளைப்பணிபூண்டு வெண்டாமரையில் வீற்றிருந்து வீணை இசைக்கும் அற்புத அரசி கலைவாணியே!
உனை தொழுவோர் நலம் பெற வைக்கும் அருட்கொடை நீயம்மா!
வாழும்வரை உனை மறவோம்,எமைக்காத்திடுவாய்! யாவையும் எமக்களித்து எமை வாழவைப்பாய் வாணி அம்மா!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.