வாரம் 189
“எண்ணம்”
மனிதமனம் ஆயிரமாயிரம் எண்ணங்கள்
மலரும் விளைநிலம்
எண்ணங்களுடன் மருவி நிற்கும் ஆசைகள் அனந்தம்
அனைத்தும் நிறைவேறினால் இறைவனுக்கென்ன வேலை
வாழும் வரை எண்ணங்கள்,இகமதில் எத்தனை தொல்லை
உயர்குலமும் உரிய வளர்ப்பும்,உயர்ந்த நட்பும்
உயர் சிந்தையின் உறைவிடம்
மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப்பாயாது
கற்றூண் பிளந்து இறுகுவதன்றி நற்சிந்தனைகள் ஒருபோதும் வளைந்து கொடுக்காது.
கடலலைகள் படகை அசைப்பது போல எண்ணங்களும் மனதை ஆட்டி விளையாடும்
உயர்ந்த கோபுரங்களில் வாழும் தாழ்ந்த உள்ளங்கள்
அறிந்தும் அறியாதவர் போல்
அண்டி வாழும் பசித்த வயிறுகள்
எண்ணங்கள் உயர்ந்தால் போலிப் பிரபலங்கள் நாதியற்றுப்போகும்
நல்லெண்ணங்கள் உயர்வே நாட்டின் வளர்ச்சியை பறைசாற்றும் அளவு கோல்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.