சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 186

“இனிய என் விடுமுறை”

ஆண்டுகள இருபத்து இரண்டு ஆயின புலம் பெயர்ந்து
உறுப்பினர் எழுவரில் அறுவர் வாழுகிறோம் நாடுகடந்து
ஒரு தம்பி மட்டும் தடங்கி விட்டான் தாயகத்து
அவனை தூக்க முடியவில்லை அரும் பாடுபட்டு

புலம்பெயர்ந்து வாழுகின்றோம் விடுமுறைகள் பலவரும் போகும்
அவை என்றும் இனித்ததில்லை
அருமைத்தம்பி ஞாபகம் முள்ளாய்க்குத்தும்
இதய மூலை
சித்திரை புத்தாண்டு 2022 வந்தது இனிய விடுமுறை
திட்டமிட்டு சேர்ந்தோம் ஒன்றாய் தாயக மண்ணில் தாய்மனை

வானும் கடலும் நிறம் மாறலாம், உண்மைப் பாசம் மட்டும் மாறிடாது
அன்பு பாராட்டும் அம்மா அப்பா அருயிர் உடன் பிறப்புகள் எதுவும் இதற்கு ஈடாகாது
அளவளாவினோம் அன்பினில் கட்டுண்டோம் அரவணைத்தோம். வருடமொருமுறை தாய் மனையில் ஒன்றுகூட திட்டமிட்டோம்
இதை விட இனிதாய் வேறொன்றில்லை என்றோம் தெளிந்தோம் பிரிந்தோம் மீண்டும் சேர்வோம்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.