வாரம் 186
“முதிமையை மதிப்போம்”
சின்னஞ்சிறுவனாய் இன்று நீ துள்ளிக்குதிக்கின்றாய்
காலத்தின் வேகத்தில் முதுமையை நீ காண்பாய்
நாள்,வாரம்,மாதம்,வருடம் என ஓடி மறைவதை உணர்வாய்
வளர்ச்சியடைவாய் இயற்கையின் நியதியைப்புரிவாய்
புரியாதபுதிர்கள் பலகாலங்காட்டும்,புரிந்து கொள்வாய்
வளைந்த வில்போல் கூனிச்செல்லும் முதியோரை காண்பாய்
காவோலை விழச்சிரிக்கும் குருத்தோலையாய் நகைப்பாய்
உனக்கு அந்நிலை வரும்போது அன்று நீ வருந்துவாய்
பூவாகிப்பிஞ்சாகி காயாகிக்கனியாகி மண்ணில் விழ்தல் அறிவாய்
வேலாய் நிமிர்ந்து நின்றவன் கூனி வளைதல் முதிர்ச்சியின் விதி என்பால்
எல்லோர்க்கும் இதுவே விதி எமக்கும் அதுவே கதி எனதெளிவாய்
முதியோரை மதித்தல் எமது தலையாய கடன் என்பதை நம்புவாய்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.