சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 205

“தை மகளே”

தை மகளே வருக! தமிழ் மகளே வருக!
தரணியாவும் காத்திருக்கும் முதல் மகளே வருக!
மாரிமழை காத்திடுவாய் கடுங்குளிரும் போக்கிடுவாய்.
மாதங்களின் தாய் நீயே கருணையுள்ளங்காட்டிடுவாய்.

உத்தமனாம் உதயனுக்கு தைப்பொங்கல் வைத்திடுவாய்.
மாடுகளை நினைவிருத்தி மாட்டுப்பொங்கல் பொங்கிடுவாய்
ஆழிப்பேரலையின் அனர்த்தங்கண்டு துடித்தவனே
மண்டூர் புயல்வந்து கால்நடை கவர்ந்தபோது கண்கலங்கித் தவித்தவளே
மண்ணீரம் காக்கின்றாய்,மண்ணில் வெப்பமும் தருகின்றாய் விதைமுளைக்கச் செய்கின்றாய் பயிரையும் வளர்க்கின்றாய் பசுமை மூடச்செய்கின்றாய் உயிர்களின் பசிபோக்கவும் செய்கின்றாய்.
சாதிமத பேதமின்றி சனமனைத்தும் கொண்டாடும் தை மகளே
நீயும் சூரியனும் இல்லையெனில் எங்கு செல்வோம் சொல்லியழ.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.