சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 181
“ஆடிப்பிறப்பு”

ஈழத்தமிழர் கூழ்குடித்து கொழுக்கட்டை தின்று
கூடி மகிழும் பெரு விழா ஆடிப்பிறப்பு
கருக்கூட்டும் மாரிக்கு கால் கோள்போடும் ஆடிமாதம்
ஆடி மழை தேடி உழும் ஈழத்துக் கமக்காரன்.

ஆடிபிறந்தவுடன் உணவு இருப்பை உயர்த்தமுயலும்
இம்பருலகில் இருக்கும் அப்பா இனிதாய் இருக்க நினைவூட்டும்
ஆடி அமாவாசை சிரார்த்தம் செய்யும் அன்பு மகன்
வேற்றினத்தில் காணாத தனித்துவமான பாரம்பரியம்.

ஆடிக்காற்று சுழன்றடித்தால் ஊழிக்காற்றது திண்ணம்.
அராஜகம் எல்லாம் அழித்துச்செல்லும் ஆடித்தாயவள்
இந்த ஆடியிலும் எமை மீட்டாய்,எம் தலைகள் ஒன்றுசேரா
எம்தலைகள் ஒன்றிணைய வசியம் ஏதும் காண்பாய் தாயே.!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.