சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 179

“பிரிவு துயர்”

தவில் நாதஸ்வரம் முழங்கும் அளவெட்டியூர் பிறப்பிடம்
அன்பும் பண்பும் நிறை செல்லையா கருணாகரன் மீரா தம்பதிகள் இணையுற்ற இப்பெற்றாருக்கு

இரு செல்வப் புதல்வருள் மூத்தவன் பிரதீஷ்
கல்வியிலும் துடுப்பாட்டத்திலும் வல்லவன்
பதினெட்டுவயதில் பல்கலைக் கழகம் சென்றவன்
இலண்டன் மெச்சும் மாணவர்களில் முதல்வன்.

நாளை விடிந்தால் பிரதீஷ் பிறந்தநாள் கொண்டாடுவான்
சொல்லாமல் வந்த மழைபோல் பிரதீஷ் திடீர் மரணமானான்.
இடிவிழுந்த நிலையில் கருணாகரன் குடும்பம்
இலண்டன் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.
வாழ்க்கை தொடங்கமுன் வாழ்வைத் தொலைத்த தலைமகன்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.