சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 178
பாமுகம்”

வடதுருவத்தில் வாரமொருமுறை மலரும் பாமுகம் பார்.!
யாவரும் வியக்கும் வண்ணம் அலையுலா வரும் சிறப்புப்பார்.!
இலண்டன் தமிழ் வானொலி என்றும் தமிழ் பணியில் முன்னணி
பொறுப்பாளர், தொகுப்பாளர்,பணியாளர் அனைவருக்கும் தமிழின் நன்றிகள்.

சிறுதுளி பெருவெள்ளம் ஆனது, பாரெங்கும் பரந்துவாழும் தமிழர் ஒன்றாயினர்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு,
சாற்றி நிற்கும் தமிழன் ஒற்றுமையின் துடிப்பு.
ஒலி ஒளித்துறையின் வளர்ச்சி ஊடாய் உச்சிதொடும் பாமுகம் நிகழ்ச்சி.
தமிழின் தாழ்விற்கு இனி இடமேது? தமிழை தாய்ப்பாலுடன் பருகிய இனமிது.!
பாமுகம் தொடாத தலைப்பில்லை,வள்ளுவம் உரைக்காத வாழ்க்கை நெறியில்லை.
மூவாயிரம் ஆண்டுக்கு முந்திய தமிழன் இன்று பாமுகப்பூக்கள் அர்ச்சித்து ஒன்றிணைவதில் வியப்பில்லை.

நாகரீக வளர்ச்சிக்கு மொழிவளர்ச்சி ஒரு அளவீடு
அதைச்செயல் வடிவில் காட்டும் பாமுகம் மொழிப்பற்றின் குறியீடு.
எல்லாப் புகழும் இறைவனுக்கே .!
பாமுகத்தால் தமிழன் தமிழையும் தன்னையும் நன்றாய் உலகுக்கு காட்டியமைக்கே.!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.