சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 176
இன்பம் எங்கே”

கிட்டாத இன்பம் எட்டாது போனாலும் சட்டை செய்யாது தொடரும் மனது.
கிட்டாதாயின் வெட்டென மற என ஔவை சொன்னதை ஏன் மறந்தாய் ?
சூடுபட்ட பூனை அடுப்பங் கரை நாடாது,
பட்டதை மறந்து மீண்டும் நாடல் உன் சபல புத்தியன்றோ?
துன்பமண்டாமல் வாழ்வதே வாழ்க்கையில் நாமடையும் பெரு வெற்றியன்றோ?

கனிரசமாம் மதுவருந்திக்களிப்பதல்ல இன்பம்.
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்.
இணையில்லா மனையாளினின்பம் அவள் அருகிருந்து ஊட்டுவதை மறப்பது தான் துன்பம்.
அமிழ்தொத்த மழலையின்பம் இறுதிவரை கூடவரும்
அதைமறப்பது தான் வாழ்வினிலே நீயிழைத்த துன்பம்.
நிறை செல்வம் டாம்பீகம் சிறுபொழுதில் மறையும் கண்ணிருந்த போது தொழாத சூரியனை கண்போனபின் வருந்தி என்ன பயன்?
ஆரோக்கிய வாழ்விற்கு சிந்தனைகள்,நற்பணிகள் துன்பமுனை அண்டாது காக்கும்.
துன்பமற்ற வாழ்வே நீயடையும் பேரின்பம். இதை உணர்ந்து நடப்போர்க்கு என்றுமில்லை துன்பம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.