வாரம் 204
*”குழந்தை”*
நிறைவாகவே செய்தனை இறைவா! நின்படைப்பில் குறையேதுமில்லை
நிறையும் குறையும் குழந்தை வளரும் சூழலே எல்லை
மழைத்துளி மண்ணைத்தொடும்வரை காத்திருக்கும் தாய்மை
மண்ணின் மாசுடன் கலந்து குணம்மாறுதல் இயற்கை
பிறப்பு முதல் இறப்புவரை மனிதவாழ்வில் பலபருவம்
மாசறு வெள்ளை உள்ளங்கொண்ட பொற்காலம் குழந்தைப்பருவம்
அன்னை மடியில் ஊட்டும் அமுதுடன் ஒழுக்கமும் அறிவும் இணையும்
ஐந்தில் பெற்ற அறிவே ஒருவனை ஆயுள் முழுவதும் உயர்த்தும்
பசுமரத்தாணிபோற் பதிந்திடும் இளமையிற்கல்வி
பெரியோரைப் பேணலும் நல்லொழுக்கமும் பெருக்கிடச்செல்லும் பள்ளி
மதிப்பின் பெருமையும் அவமதிப்பின் சிறுமையும் அடைந்ததை எண்ணி
மனதில் அமைதி நிலவிடும் நற்குழந்தையின் விருத்தி.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.