சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 174
“புதிய பார்வையில் அன்னையர் தினம்”

ஆண்டுக்கு ஆண்டு ஆனந்தம் பாடி வரும் அன்னையர் தினம்
இசையின் தவறா கேட்பவர் பிசகா தப்புத்தாளமாய் சிலகாரணங்கள் இசையில் குளறுபடிகள்.

அன்னை என்பவள் கண்முன் உலாவரும் கண்கண்ட தெய்வம் அன்றோ?
கண்டவரெல்லாம் அன்னை மீது சேறு பூசுதல் கண்டிக்கத்தக்க தொரு குற்றமன்றோ.?

அன்றுமுதல் இன்றுவரை ஆணாதிக்கம் கொடிகட்டிப்பறக்குது கண்ணில் படும் தெளிவான காட்சியன்றோ.?
சொத்துடமை பறிபோனதும் அடியமைப்படுத்தலில் பெண் அவலநிலையானதும் இன்று வெட்ட வெளிச்சமன்றோ?
வீட்டுக்குள்ளே பெண்ணைப்பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதருந்தலை கவிழ்ந்தார் என பாரதி குமுறியதும் இதனாலன்றோ.?
இன்று ஆயிரம் பெண் ஐன்மம் அன்னை விடுதலைக்காய் மண்ணில் குதித்தமை வீணுக்கென எண்ண வேண்டாம்.
புதிய பார்வையில் புதியதோர் அன்னையர் தினம் பூத்துக்குலுங்கும் இதில் ஜயம் வேண்டாம்

பெண்கொடுமைகள் பொடிபடும் புதுமைகள் வெளிப்படும் புதியதோர் அன்னையர் தினம் உதயமாகும் நம்புவாய் மகளே நாளை நமதே.!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.