வாரம் 172
“தாய் சொல்லைத்தட்டாதே”
அன்னை மொழி கேளாதோர் அவனியிலே படும்பாடு
சிறுவயதில் கற்றதுண்டு சிரமேற்கொண்டதில்லை
அன்னையெனும் அன்புநிறை ஆலயம் அதன் பட்டறிவு ஆயிரம்
என்றும் எம்மேன்மைக்காய் உழைத்திடும் மிகஉயர்ந்த கோபுரம்
வானுயர்ந்த மர உச்சியிலே கூடுகட்டி வாழும்போதும்
தன்குஞ்சுகளின் எதிர்காலம் சேமமுற அமைந்திடவே
நாளுந்தன் கூட்டை செப்பனிட்டு பாதுகாப்பைப்பலப்படுத்தும்
சிறகடித்துப்பறக்கும் வரை வெளியுலகு தெரியாது பாதுகாக்கும்
பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு, தாய்சொல்லைக்
கேளாத படு சுட்டிக்குஞ்சொன்று அன்னை மொழி மறந்தது
தவறி வீழ்ந்து இறந்தது இன்னும் சிலநாள் பொறுத்திருப்பின் கூட்டமாய் வானில் பறந்து மகிழ்ந்திருக்கும்.
அன்னை சொல் வேதமெனும் அறிவுடமை அற்றதனால்
தானும் இறந்து மற்றவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.