வாரம் 170 “மறுபிறவி”
மரணத்தைக் கண்டு மருண்டிடும் மனிதா
மரணம் ஒரு நாள் வந்தே தீரும் அஞ்சுதல் வேண்டா
உடல் என்பது உயிர் காவும் வெறுங்கூடு
அழிவில்லாத்து ஆன்மா, அழிவது உடல், கண்கூடு
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் மாந்தர்
பிறவாமை வேண்டின் பற்றது நீக்கி பரமனைப் பணிவாய்
ஆன்மா, மறுபிறவி வலியுறுத்தும் கீழைத்தேய மதங்கள்
சைவம் சமணம் பௌத்தம் மறு ஜென்மக்கோட்பாட்டில் அடக்கம்
கிரேக்க ஞானியர் பிளாட்டோ, அரிஸ் டோட்டில்,பைதகோரஸ்
மறுஜென்மக் கோட்பாட்டினை ஆய்ந்து போதனை செய்தோர்
எகிப்தியர் கட்டிய பிரமிட் மறுபிறவி உண்டென வலியுறுத்தும்
விஞ்ஞானமும் அறிவியலும் வளர வளர மறுபிறவி உண்மைகள் நிரூபணமாகும்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.