சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

“காதல்”

காதல் கைகூடும் நம்பிக்கை நழுவிப்போவதும் சகஜம்
தோற்றவர் படுந்துன்பமோ முழுநீள சோக நாடகம்
காதல் தோல்வி பகரும் காவியங்கள் மக்கள் மனதில் முதலிடம்

வாலிபத்தில் வருங்காதல் தடுக்க முயலும் பெற்றார் சமுகக் கட்டுப்பாடு
உலகம் போற்றும் காதலர்கள் சமாதிகளில் அடக்கப்பாடு
இன்பியலை விட துன்பியலை இரசிப்பதில் மனித மனம் ஈடுபாடு.
வென்றாரைப் புறம் தள்ளும் தோற்றாரின் எண்ணிக்கை வெளிப்பாடு

மலரிலும் மென்மை உணர்வினில் மேன்மை பெறும் காதலின் நிலைப்பாடு
உள்ளத்தின் ஒருமைப்பாடு போற்றி நிற்றல் காதலில் கண்கூடு
உடலிச்சை முன் நிற்பின் அது உண்மைக் காதலுக்கு முரண்பாடு
உள்ளத்தால் சேரும் காதல் உயர்வானது அதற்கே உலகோர் என்றும் உடன்பாடு.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.