சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 232

“விடுமுறைக் களிப்பு”

விடுமுறையை விரும்பாதபேர்வளிகள் உலகில் உண்டா?
பள்ளிச்சிறுவர் பருவ விடுமுறையை வெறுப்பதுண்டா?
வளர்ந்தவர்கள் கூட விடுமுறையை கொண்டாட திட்டமிடுவர்
அனைவருக்கும் ஆனந்தமூட்டும் விடுமுறை என்பதில் ஜயமில்லை

அன்று அடிமைகளாய் ஓய்வின்றி உழைத்தது ஒருகாலம்
அடிமைத்தளை அறுத்துதவிய தொழிற்புரட்சி இடைக்காலம்
எந்திரம் கூட ஓய்வின்றி உழைத்தால் உடைந்துபோகும்
ஓய்வின்றி உழைக்கும் மனிதனைப்பார்! விளைவு புரியும்.

பருவவிடுமுறையில் பள்ளிச்சிறாரின் சுற்றுலாவும் களிப்படையத்தான்
குடும்பமாய் கூட்டமாய் யாத்திரைசெல்வதும் விடுமுறைகாலம்தான்
பெரும் போட்டிகள்,கலை விழாக்கள் கண்டு மகிழ்வதும் ஓய்வுகாலம் தான்
நாளும் உறங்கி ஓய்வெடுத்தலும் இயற்கை தந்தவரந்தான்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.