சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 229

“திருநங்கை”

ஆணென்றும் பெண்ணென்றும் மனிதனை ஆண்டவன் படைத்தானையா!
இனம்பெருக்கி வாழ்கவென வழிசமைத்துக்கொடுத்தான் ஐயா!
நிரந்தரமானஇந்நிகழ்வில் இடையூறுவந்ததையா!
பால்மாற்ற வியாதியென யௌவனத்தில் வருகுதையா!

ஆண் அவன் ஆண்மைகுன்றி பெண்ணாவதும்
பெண் அவள் பெண்மையின்றி ஆண்மை அடைவதும்
அதிசயமாய் திருநங்கை என்றொரு பால் தோன்றுதையா
ஆணுமில்லா, பெண்ணுமில்லாரை அலி என்றார் அந்நாளில் ஜயா
விந்தையான மாற்றமுறும் திருநங்கையர் இதை யாருக்குவெளிப்படுத்துவாரையா?
பெற்றவரும் கண்டுகொள்ளார் உற்றவரும் உணரமாட்டார்
மூடிமறைத்துவைத்து இவர்படும் மனக்கிலேசம் சொல்லமுடியாதையா

எந்நாளில் விடிவுவரும்? சமூகம் என்று அரவணைக்கும்?
அந்நாள் வந்தாலன்றி திருநங்கையர் வாழ்வில் எங்ஙனம் ஒளி பிறக்கும்?
ஆண்பால் பெண்பாலுடன் பொதுப்பாலின் பிரிவில் திருநங்கையரை இணைத்தல் விவேகமான செயலாகுமா ஐயா?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.