சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ சந்தம் சிந்தும் சந்திப்பு இல.224 ]
“மூண்ட தீ”

முள்ளிவாய்க்கால் பேரவலம் இன்னும் முழுமையாய் ஓயவில்லை
இனப்பகையால் மூண்ட தீயின்சினம் ஆறப்போவதுமில்லை
மூண்டபோர் மௌனித்து தசாப்தம்ஒன்றரை கூட ஆகவில்லை
வஞ்சத்தின் விழுப்புண்களை மறப்பது வீரமறவர் பண்புமில்லை

குழந்தைகள் பால்மணம் மாறா பாலச்சந்திரன்கள்!
பல்லாயிரக்கணக்கில் பரிவுசிறிதுமின்றி பலியாக்கி மகிழ்ந்தாய்!
உனைப்படைத்த புத்தராலும் பாவமன்னிப்பில்லாப் பாவியானாய்!
நேர்க்கணக்கில் தலை கொய்தாலன்றி ஆறாது மறத்தமிழனிடம் மூண்ட தீ!
வாய்ப்புக்ளை உருவாக்கி வளங்களைப்பெருக்கி குறிதப்பாமலடிபவன் தமிழன்!

எமையீன்ற ஈழத்தமிழ் அன்னையே !
பாலொடு வீரமூட்டிய உன் மைந்தர் கண்ணுறங்கார்!புதுப்பொலிவுடன் தமிழீழம் மலரக்காண்பாய்!
சிங்கள துவீபம் தமிழ் ஈழத்தின் கால்களில் மிதிபடக்காண்பாய்!
குளக்கோட்டன் பொறித்தவை நிஜமாகுமென இறும்பூதெய்துவாய் தாயே!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.