சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 201

” கனவு மெய்ப்படவேண்டும்”

“நாடு நலமாய் வாழ நம் இளைஞர் நெஞ்சில் கனவுகள் மலரவேண்டும்”
அறிஞர் அப்துல் கலாம் கண்ட கனவு
கனவுகள் நனவாக கடும்தவம் இயற்றல் நம்மவர் பண்பு.
கனவுகளற்ற இளைஞர் தமக்குமுதவார் நாட்டுக்கும் நலம்தரார் என்பது இயல்பு
உறுதியான உழைப்புக்கும் குறிக்கோளடையும் முயற்சிக்கும் அடிப்படையானது கனவு
மங்கையர் கரசி வளவர்கோன் பாவை சைவம் தழைக்க கண்டகனவு
சைவம் வளர்ந்தது சமணம் தோற்றது வரலாறு சொல்லும் நிகழ்வு
திருநீற்றுப்பதிகம் சிவனடியார் சிந்தையுள் என்றும் அணையா விளக்கு
கனவு மெய்பட அம்மையின் உழைப்பு சைவத்தின் சிறப்பு
தமிழ் உயர கனவுகள் கண்டு மெய்படுத்திய பழம் பெரும் புலவர்
அவர் தடம் பற்றி இன்று தமிழ் தொண்டு புரியும் தமிழ் அறிஞர்
தேமதுரதமிழோசை தேசமெங்கும் பரவச்செய்யும் பாமுகப்புலவர்
வழி நடாத்தும் இலண்டன் தமிழ் வானொலி தமிழன்னை போற்றும் அரும் புதல்வர்
மொழி மதம் பல்துறைகள் போற்றி வளர்க்கும் எம் தமிழர்
முயற்சிகள் அனைத்தும் மெய்ப்பட உளமார வாழ்த்தும் தமிழன்பன்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.