சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 223 ]
*முள்ளி வாய்க்கால்*

ஈழத்தமிழர்வரலாறு முள்ளிவாய்க்கால்
அவலமோ நிரவமுடியாகுறைபாடு
இயற்கையின் கோரதாண்டவம் மீண்டபின் ஒருநாள்வாழலாம் எனும் நம்பிக்கையின் கோட்பாடு
அடிமனதில் குரோதம் ஆக்கிரமிப்பில் துவேஷம்
இன அழிப்பில் காட்டும் குன்றாத தீவிரம் அடிபட்டு பொருதிஅழிக்க வீரமே இல்லாத நிலைப்பாடு

நல்லமேய்பனாய் நடித்து மந்தையை மலைமேல் ஏற்றிக்கொன்ற சூழ்ச்சியின்வெளிப்பாடு
முள்ளிவாய்க்காலில் கண்ட அவலம் சூழ்ச்சிவலை பின்னி அடைந்த இனஅழிப்பின் வெற்றி
நதியும் நேர்மையும் இறந்துபோனதை நிரூபிக்கும் அரியதொரு முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து ஒன்ரை தசாப்தம் ஆனபோது தலலைவரோ பதவி நீங்கி தலைமறைவு
சிங்கள மஹாஜன மேல்மட்டம் இன்று ஒருவேளை சோற்றுக்கே கை ககலப்பு
கடன் கொடுத்த நட்பு நாடுகளோ எரிந்த வீட்டில் பிடுங்கியது மிச்சம் என சுறுசுறுப்பு
நாட்டின் பிரதான வளங்கள் யாவுமின்று அந்நிய நாடுகளால் ஆக்கிரமிப்பு
அட்சய பாத்திரங்கள் சகிதம் பணம் படைத்த நாடுகள் படலையில் நின்றுசரணம் கச்சாமி ஓல மயம் மீட்டரோ அடித்துக்கூறுகிறார் எங்களை நம்பி கடன் தர பணம் படைத்த நாடுகள் இப்போது தயார் கவலை வேண்டாம் வேண்டியதை கடனாய்ப்பெற நாங்களும் தயார் நீங்கள் குழப்பமெதுவுமின்றி இடுப்புப்பட்டியை இறுக்கி வைத்திருங்கள்
கடன் பட்டே கடன் தீர்க்கும் அதிசய மீட்டர் இதுபோதாதா? முள்ளிவாக்காலில் தப்பியோட முடியாது உயிரிழந்த லட்சோபலட்சம் ஆன்மாக்களின் காதில் தேன் வந்துபாய?
முள்ளிவாக்காலில் அன்றொலித்த அவலஓலம்
மறக்கவும் முடியாது!மறைக்கவும் முடியாது!மன்னிக்கவும் முடியாது!

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் சொந்த மக்களை?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.