சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 220 ]
“நடிப்பு”

நடிப்புக்கலையே தெருக்கூத்து நாடகம் சினிமாவின் விளைநிலம்.
வாழவழியின்றி சிலர்நடிப்பில் கலந்தபின்புலம்
பிறவிக்கலைஞரில்சிலர் பிடிவாதமாய்
ஏற்றம் மறுபுறம்
காலநேரம் பொருந்திவர முயற்சியால் முன்னோறியவர்சிலரகம்.

அந்தநாள்முதல் இந்தநாள்வரை தம்நடிப்பால் உயர்ந்தபலருண்டு
கலைகள்வளர தொழில்நுட்பம்பெருக சினிமாத்துறையே சிகரத்தில்இன்று
ரசிகமன்றங்கள் உயர்விருதுகள் அபிமான நடிகரின்சொல்லே வேதம்இன்று
நாட்டுஅரசியலில்ஏன் நாட்டையேஆழும் நடிப்பின் சிகரம்

எதிலும்சினிமா எங்கும்சினிமா உலகமேபோற்றும் சினிமாமயம்
சும்மாஇருந்தவரும் மக்களின் தலைவராய்நடிக்கிறார்
திரளும்மக்கள்பின்னால் திரிகிறார்
புதியவர் தலைவராகிறார் மூத்தவர்சிறையில்வாட கோஷமோ குறையவில்லை
உலகமே ஒருநாடகமேடை வாழும்மக்களே அதன் நடிகர்கள்.

நன்றி வணக்கம்
சிவா சிவாதர்சன்.