[ வாரம் 212 ]
“மொழி”
ஒலியிருந்தும் மொழிஇல்லா உலகமிருந்தது ஒருகாலம்
ஒலியை வழிப்படுத்தி மொழியாக்கியது மனித விவேகம்
சைகை குறியீடு சித்திரம் அடிப்படையில் மொழியின் தோற்றம்
பலநூறு ஆண்டுகள் பாடுபட்டு மொழியெனும் உன்னத உருவாக்கம்.
ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கில் மொழிகள் இன்று புழக்கம்
நாகரீக வளர்ச்சி,சனத்தொகைப்பெருக்கம்,தொடர்பாடலின் அவசியம்
இனத்துக்கென்று நாட்டுக்கென்று பன்மொழிகள் பிரவேசம்
விடாமுயற்சியின் ஊக்கம் சாதனைகளின் பெருமை மொழி உருவாக்கம்
இலக்கணம் வகுத்து இலக்கியம் படைத்து புகழ்பெற்றது எம் தமிழ் மொழி
வளத்திலும் வனப்பிலும் தொன்மையிலும் முன்னணி எம்மொழி
சங்கம்வளர்த்த தமிழ்மொழி நாகரீகமான முதன்மொழி
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ் மூன்றையும் ஒருங்கே வளர்த்த தமிழ் மொழி
“தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.