சந்த கவி இலக்கம்_146
“விழிப்பு”
பெருகிவரும் சனத்தொகை
வீடு தொழிற்சாலைகள் நிர்மானம்
பசுமையை
இயற்கையை அழிக்கின்றன!
மனிதன் அழிவின்
பாதையை நோக்கி நகர்ந்து செல்கின்றான் இயற்கை என்பது
எமக்கு கிடைக்கப்பெற்ற வரம்
பாதுகாப்பு
அனைவரின் கடமை!
மாசு இல்லா
காற்றை பெற
மாசு அற்ற
சுழலை உருவாக்குவோம்!
மாசு இல்லா சூழல்
மனித வாழ்வின் உயிர்நாடி!
ஆரோக்கியமான வாழ்விற்கு
இயற்கையை பராமரிப்பது
எங்கள் கடமை புரிந்துணர்வு!
பொலித்தீன் பிளாஸ்ரிக்
பாவனையை
தவிர்ப்பதே
சுற்று சூழலின் தூய்மை !
விழிப்புணர்வுடன் நடந்து
பூமியை காப்போம்
இயற்கை எமது நண்பன்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்