சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__92
“புதிர்”
புதிருக்கு புது பொலிவு
பூத்திருக்கும் புதிர்
புன்னகை பூக்க
பாத்திருக்க வந்துசேரும்

காத்திருக்கும் புதிர்
கனிவான நெல்மணிகள்
நம் கண்மணிகள்
நம்மை மகிழ்வு படுத்தும்

நான் பார்த்த புதிர் எடுப்பு
தலப்பாகை கட்டி
வேட்டி உடுத்து
புது மாப்பிள்ளையாய் புதிர் எடுத்து வருவார் அப்பா

குத்து விளக்கு ஏற்றி
நிறை குடம் வைத்து
புது பொலிவுடன் பூத்திருப்பாள் அம்மா

புது நெல் கையால் உடைத்து
வாய் இனிக்க பொங்கல் செய்வார் அம்மா

வீட்டு வாசலில்
இரு பக்கமும்
புது கதிர் கட்டி அழகு பாப்பார் அப்பா

ஆனந்தமாய்
ஆடிப் பாடி
புது நெல்லின்
பொங்கல் உண்டு
மகிழ்ந்து உறவாடி நிற்போம் நாங்கள்!!

நன்றி வணக்கம்