சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_122

“மீண்டெழு”
நாற்று நட்ட பயிர் கூட
கருகி போக
காத்திருந்து பாத்திருந்து
பொறுமை காத்து
மனம் கலங்கி போகாமல்
பாத்து விதைத்து
விளைச்சல் கண்ட விவசாயி மீண்டு எழுந்தான்!

அறுவடை காலத்தில்
அடித்து கொட்டுது மழை
ஆற்றல் கொண்ட விவசாயி அச்சம் இன்றி எறிப்பு பாத்து
இரவோடு இரவாய் அறுவடை நடக்குது இடர்களை தாண்டி இன்னலை துடைத்தான்
எழுந்து நின்றான்!

சத்தம் இல்லாத யுத்தம் தேவை
தனிமை இல்லாத உலக தேவை
ரத்தம் சிந்தாத யுத்தம் நடந்தால் மனிதன் மீண்டு எழுவான்! வருவான்!

வாழ்க்கையில் தகுதி உள்ளவனை விட
தன்னம்பிக்கை என்னம்பிக்கை
உள்ளவனே மீண்டெழுவான்!!
நன்றி
வணக்கம்