சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_120

குழலோசை

குழந்தையின் சிரிப்பில்
குதுகல ஓசை
மகவின் அழுகையில் அதில் ஒரு ஓசை
குருவியின் பேச்சிலும்
கண்ணாடி பாத்து கண்ணாடிக்கு கொத்துவதில் தாளத்துடன் ஓசை அதை பார்க்க ஆசை

கண்ணை பறிக்கும்
மின்னலின் இடியோசை
ஒளியுடன் ஒலியையும் ஏற்படுத்தும் ஓசை

மலையில் இருந்து விழும் நீரின் சலசலப்பு ஓசை
அது ஆற்றில் சென்றடைவதை பார்க்க ஆசை

மிக்சி அடிப்பதில்
அலமோதும் ஓசை
தளபாடம் கழுவும் மிசினின் மினுமினுப்பு ஓசை
உடுப்பு தோய்க்கும் எந்திரம் எடுத்தடிக்கும் ஓசை அதை போடுகையில் ஆசை

கறி கொதிக்கையில் சுவைமிக் ஓசை
சுவைக்கையில் நாவூறும் ஆசை!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்